மார்ச்சில் சிறீலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – ஏப்பிரலில் பொதுத்தேர்தல்

63

சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இறுதிப் பகுதியில் அல்லது மே மாதத்தின் ஆரம்பத்தில் பொதுத்தேர்தலை நடத்தலாம் என சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பயணத்திற்கு முன்னர் தேசப்பிரியாவைச் சந்தித்த கோத்தபயா இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருந்தார். அதனைத் தொடர்ந்தே விரைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 25 ஆம் நாள் அல்லது மே மாதம் 9 அல்லது 16 ஆம் நாள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேதினம் 1 ஆம் நாள் இடம்பெறுவதால் மே மாதம் 2 ஆம் நாளில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என தேசப்பரிய தெரிவித்துள்ளார்.

புதிதாக கடந்த அரசு கொண்டுவந்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை அரச தலைவர் குறைந்தது நான்கு வருடங்கள் மற்றும் ஆறு மாதங்களின் பின்னரே கலைக்க முடியும். அல்லது அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

எனவே தற்போதைய நிலையில் மார்ச் 2 ஆம் நாளின் பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையேஇ எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றாக தேர்தலில் நிற்க வேண்டும் எனவும்இ தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகள்; தொடர்பான தெளிவான கொள்கையை அவர்கள் முன்வைக்க வேண்டும் எனவும் அரசியல்அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.