மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என கைதான 12பேருக்கும் 30 வருட சிறைத்தண்டனை

102

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாக அண்மையில் மலேசியாவில் கைதான பிரதேச அரசியல்வாதிகள் இருவர் உட்பட 12பேருக்கும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படுமாயின் 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் (31) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்களின் விசாரணைகள் நேற்றும் (01) இடம்பெற்றது.

மேற்குறித்த குற்றவாளிகளில் அரசியல்வாதிகள், சமூக ஊடகங்கள் ஊடாக விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெற நிதிப் பங்களிப்பு வழங்கியதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

ஏனைய குற்றவாளிகள் விடுதலைப் புலிகளுக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மலேசிய பாதுகாப்புப் பிரிவு நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.