மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்;அதற்காக மிகவும் வருந்துகிறோம் – ஈரான்

0
22

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு ”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” என ஈரான் ஜனாதிபதி ரவ்கானி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஈரான் ஜனாதிபதி ரவ்கானி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்கானி கூறும்போது,

‘‘176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழிவான தவறுக்கு ஈரான் தனது ஆழ்ந்த  வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.

எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்துடன் இருக்கும் எனவும் இதற்காக தனது  ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மன்னிக்க முடியாத  இந்த தவறு குறித்து சட்ட ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here