மன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு சிரேஸ்ட சட்டத்திரணி கே. எஸ். இரட்னவேல் தெரிவிப்பு

மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கை தற்காலிகமாக எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நிடை நிறுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இரா. கண்ணன் இன்று (13.3) உத்திரவிட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே. எஸ். இரட்னவேல் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் மேல் நிமன்றத்தில் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மன்னார் சதோச மனித புதைகுழி வழங்கில் சட்டத்தரணிகள் சிலர் ஆஜராகுவதற்கு வழங்கப்பட்ட உத்திரவை மீள் பரிசீலனை செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக சட்டத்தரணி தெரிவித்தார்.

தொடர்ந்தும் சிரேஸ்ட சட்டத்தரணி கே. எஸ். இரட்னவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்றையதினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிமன்றத்தில் மன்னார் புதைகுழி சம்பந்தமாக மன்னார் நீதவான் மேற்கொண்ட ஒரு கட்டளையை மீளாய்வு செய்வதற்கான ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தோம்.

இந்த மாதம் மார்ச் 10 ஆம் திகதி மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதவான் குறித்த மன்னார் அகழ்வாராய்ச்சியில் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதாவது காணாமல் போன குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் பங்கு கொள்வதற்கு எந்தவிதமான அருகதையும், தகுதியுமில்லை எனவே அவர்கள் சார்பாக சட்டத்தரணிகளும் இந்த சட்ட நடவடிக்கையில் பங்குபெற்று கூடாது என்று கட்டளை பிறப்பித்திருந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக நாங்கள் மீளாய்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தோம்.

அந்த விண்ணப்பத்தில் என்னவென்றால் தொடக்கத்தில் மிகவும் திறந்த விடயமாக நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியும் அதன் சான்று பொருள் சேகரிப்பும் இடைநடுவில் வித்தியாசமாக மாற்றப்பட்டது.

ஏனென்றால் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பல எச்சங்கள் அதாவது 28 இளம் சிறார்களின் எலும்புக்கூடுகள் மற்றும் பிஸ்கட் பெட்டியின் லேபள் மற்றது கைகள் பின்னால் சங்கிலியால் கட்டப்பட்டு அந்த நிலையில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு இவற்றை ஊடகங்கள் அதனை எடுத்து பிரசுரித்ததன் விளைவாக அதனை பொறுக்க முடியாத அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி இதனை ஏதோ ஒரு வகையில் நிறுத்துவதற்கும், ஊடகங்களின் பங்களிப்பை தடுப்பதற்காகவும் காணால் போன குடும்பங்களின் பங்களிப்பை தடுப்பதற்காகவும் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே சட்டமா அதிபரின் ஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு வந்து நாங்கள் காணமல் போனோரை பிரதிநிதிப்படுத்தற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்த நடவடிக்கையானது ஒரு மரண விசாரணை நடவடிக்கையல்ல.

அது சம்பந்தமாக சான்றுகள் ஆபரணங்கள் மற்றும் அந்தந்த இடங்களில் காணப்பட்டதோடு காணப்பட்ட சில பொருட்களும் அங்கு காணப்பட்ட எனவே எலும்புக்கூடு மட்டுமில்லை அவை சார்ந்த பொருட்களின் கால அளவும் நிர்ணயிக்கப்பட வேண்டும். எனவே ஒரு தவறான நிறுவனத்துக்கு இந்த சான்றுகள் அனுப்பப்பட்டு ஒரு அறிக்கையை 300 ஆண்டு என்று வந்துவிட்டது.

அதை மட்டும் கவனத்தில் கொள்ளாது நீதிமன்றம் ஏனைய சான்றுகள் வரும் வரையும் பொறுத்திருக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் இந்த விண்ணப்பத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை பரிசீலித்த நீதிமன்றம் எங்களுடைய விண்ணப்பத்திற்கான முகத்தோற்றத்தில் அளவான முன்னணி காரணங்கள் இருப்பதாக திருப்திப்பட்டு இந்த வழக்கின் நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதி இடை நிறுத்துமாறு மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கட்டளையிட்டு ஒரு இடைக்கால தடை உத்தரவையும் வழங்கியுள்ளார்.

எனவே நாங்கள் காணாமல் போனோரின் குடும்பங்களின் சார்பாக இந்த விடயத்தில் நீதிமன்றத்தை அணுகி அதில் எங்களுக்கு சார்பான ஒரு உத்தரவு கிடைத்துள்ளது. அது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் மன்னார் மாவட்ட செயலாளர் பி.ஷர்மிளா,

மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட சதோசா புதைகுழி வழக்கில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அதற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். மனு தாக்கலின் பிரகாரம் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மூன்றாம் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு எங்களுக்கு சார்பாக சட்டத்தரணிகள் யாரும் ஆஜராக கூடாது என்று நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளான எங்களுக்கு ஆதரவாக வாதாட வந்த சட்டத்தரணிகளை வாதாடக் கூடாது என்று கூறினால் எங்களுக்காக யார் வாதாட இருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். மன்னார் மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது எங்களுக்கு நீதி தெரியாத சமயத்தில் எங்களுக்காக வாதாட வந்த சட்டத்தரணிகளை வாதாடக் கூடாது என்று கூறுவதால் எங்களுடைய நிலைமை என்ன? கையில் ஒப்படைக்கப்பட்ட மக்கள், வெள்ளை வானில் கடத்தப்பட்ட மக்கள், வீட்டில் வந்து பிடிக்கப்பட்ட மக்கள், கையில் ஒப்படைத்த பிள்ளைகள் அவர்களுடைய முடிவே தெரியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

காலங்களும் கடந்து கொண்டு இருக்கின்றது. இதனை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகிய நாங்கள் சமர்ப்பித்த இந்த மனுத் தாக்குதல் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றது என தெரிவித்தார்.