மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைப்பு ஏற்பாட்டில் சமூக நலத்திட்டங்கள்

218
13 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக நல திட்டங்களை மேற்கொண்டுவரும் முனைப்பு ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் இன்று பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் இந்த உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ்போன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டன.

கோகாட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஊடாக உயர்தரம்,சாதாரணதரம் ஆகிய பிரிவுகளுக்காக முன்னெடுக்கப்படும் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு வருடத்திற்கான சம்பள பணம் வழங்கிவைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வுகள் முனைப்பு ஸ்ரீலங்காவின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நடைபெற்றன.இந்த நிகழ்வில் முனைப்பு சுவிஸ் கிளை பொருளாளர் பாலா,முனைப்பு ஸ்ரீலங்காவின் பொருளாளர் இ.குகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது ஆசிரியர்களுக்கான ஒரு வருட சம்பளம் 120000ரூபா வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவில் வறிய நிலையில் உள்ள வறிய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக கோழிகள் வழங்கிவைக்கப்பட்டன.இதன்போது 50 கோழிகள் ஒரு குடும்பத்திற்க வழங்கிவைக்கப்பட்டன.குறித்த குடும்பத்தின் வறுமை நிலையினை கருத்தில்கொண்டு வாழ்வாதாரத்தினைஉயர்த்துவதற்காக இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டதாக முனைப்பு ஸ்ரீலங்காவின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here