மட்டக்களப்பில் சுயேட்சைக் குழு இன்று நியமனப் பத்திரம் தாக்கல்

16

2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சுயேட்சைக் குழு இன்று நன்பகல் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நியமனப் பத்திரத்தை புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது தம்பி உவைஸ் தலைமையிலான சுயேற்சைக்குழுவே நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முதலாவது நியமனப் பத்திரத்தை தெரிவு அத்தாட்சி அலுவலர் திருமதி கலாமதி பத்மராஜா உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நியமனப் பத்திரத்தை கெயேற்றுள்ளது.

நியமனப் பத்திரங்களை கையேற்கும் இரண்டாவது நாளான இன்று (13) பொலிஸ் பாதுகாப்பு மாவட்டச் செயலக வளாகத்தில் பலப்படுத்தப் பட்டிருந்தது.