Tamil News
Home செய்திகள் மகிந்தவின் குடும்பத்தில் ஒரு செல்லாக்காசாக இருந்தவரே கோத்தபாய – மட்டக்களப்பில் ஜேவிபி

மகிந்தவின் குடும்பத்தில் ஒரு செல்லாக்காசாக இருந்தவரே கோத்தபாய – மட்டக்களப்பில் ஜேவிபி

கோத்தபாய ராஜபக்ஸவினை பற்றிக் கூறுவதற்கு எதுவும் இல்லை.மகிந்தவின் குடும்பத்தில் ஒரு செல்லாக்காசாக இருந்தவரே கோத்தபாய ராஜபக்ஸ, இவர்கள் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் கையிலெடுத்து தமது அரசியல் இலாபத்தினை நோக்காக கொண்டது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே மகிந்த அவர்கள் தோல்வியடைந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளது.காரணம் இவர் ஒரு அமெரிக்க பிரஜை.இலங்கையுடன் எந்த தொடபும் இல்லை,குறைந்தபட்சம் பிரதேசசபை உறுப்பினராககூட இவர் இருந்ததில்லை.அரசியல் தொடர்பான எந்தவிதமான அறிவும் இல்லை.அரசியலில் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் என்ற அடையாளம் மட்டுமேயுள்ளது.

இவர்கள் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் கையிலெடுத்து தமது அரசியல் இலாபத்தினை நோக்காக கொண்டது.இந்த இனவாதத்தை தூண்டுவதற்கு தீவிரவாதிகளுக்கு பணம் வழங்கி விடயங்கள் எல்லாம் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று அரசநிதிகளை மோசடி செய்தது தொடர்பில் இன்று பல வழங்குகள் நடைபெற்றுவருகின்றன.அரச நிதியை தமது சொந்த நலன்களுக்கு பயன்படுத்தியவர்களை எவ்வாறு இந்த நாட்டின் தலைவராக வரமுடியும்.

பல வழக்குகள் உள்ள ஒருவரை வேட்பாளர் பதவியை கொடுக்கவேண்டாம் என்று சகல மதத்தலைவர்களும் கையொப்பம் இட்டு கடிதம் வழங்கியபோதிலும் வழக்கு இருக்கும்போது நாட்டைவிட்டு ஓடிய ஒருவருக்கு எவ்வாறு இந்த நாட்டின் தலைமைப்பதவியை வழங்குவது.இவருக்கு இந்த நாட்டின் தலைமை பதவியை வழங்குவதற்கு மக்கள் விரும்பமாட்டார்கள்.

கோட்டபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததானது மகிந்தவின் முகாமில் வேறு யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்தியுள்ளது.கையாளாகாத ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த நியமித்துள்ளார்.

கோட்டபாயவினை ஒப்பிடும்போது 19வருடமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தன்னால் முடிந்தளவுக்கு மக்களுக்கு சேவை வழங்கியுள்ளார் எங்களது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்க.அரச நிதியையோ மக்கள் நிதியையோ ஒரு ரூபா கூட கொள்ளையடிக்காத ஒருவரையே நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவந்துள்ளோம்.

இதுவரையில் மோசடி ரீதியான வழக்கோ மோசடி தொடர்பான விசாரணைகளோ இல்லாத ஒருவரே எமது ஜனாதிபதி வேட்பாளராகும். எந்தவேளையிலும் மக்கள் பக்கத்தில்சென்று கதைக்ககூடிய ஒருதலைவரே அவர்.தமிழ் முஸ்லிம் மக்களை ஒரே பார்வையில் பாக்ககூடிய தலைவராகும்.

கோட்டபாய ராஜபக்ஸவின் காலத்தில் ஆள்கடத்தல்கள், வெள்ளைவான்,கொலைமிரட்டல்கள் இடம்பெற்ற காலத்தில் இவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்துநின்று செயற்பட்டவர்கள் நாங்கள்.

அவர்களை தேர்தலில் தோற்கடித்தவர்கள் நாங்களாகும்.2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் அமைச்சு பதவிகள் இருந்தபோதிலும் அவர்களால்வெற்றிபெறமுடியவில்லை. அப்போதே அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.அனுரகுமார திஸநாயக்க என்னும் வேட்பாளர் மக்களுடன் சகோதரத்தன்மையுடன் பழககூடியவர்.

மகிந்த இதரக்கட்சிகள் தங்களுடன் வந்து இணைந்ததாக கூறுகின்றார்.எந்த கட்சி வந்துள்ளது என அறிய ஆவலாக இருக்கின்றது.அவர்களுடன் இணைந்ததாக தெரிவிக்கப்படும் கட்சிகளான டக்ளஸ் மற்றும் கருணா போன்றவர்கள் ஏற்கனவே அவருடன் இருந்தவர்களாகும்.நாங்கள் தேர்தல் காலத்தில் ஜேவிபி என்று வந்தோம் இன்று மக்கள் சக்தி என்று வந்துள்ளோம்.

மட்டக்களப்பில் விவசாய அமைப்புகள்,மீனவ அமைப்புகள் உட்பட 19 அமைப்புகள் இன்று எங்களுடன் கைகோர்த்துள்ளது.இது எங்களுக்கான வெற்றியாகும்.

இந்த தேர்தலானது எந்த கட்சியும் அதிகபெரும்பான்மையினை பெறமுடியாது.ஆகவே வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் காலாகலாமாக தமிழ் பேசும் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்களிக்காமல் ஒரு மாற்றத்திற்காக வாக்களிக்கவேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்திற்கு கையுயர்த்தும் நிலையே இருந்துவருகின்றது.ஒரு வரவு செலவு திட்டத்தினையும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் அவரின் கடமையினை செய்யவில்லை.உங்களது கட்சி ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றியதனால் என்ன பயனை அடைந்தது.

முகிந்த ஆட்சிக்காலத்தில் வெளியில் நல்லிணக்கம்,தேசியம் பேசிக்கொண்டு மறுபக்கத்தில் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் காட்டும்செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.

Exit mobile version