போரில் பாதிக்கப்பட்ட மக்கள் இயற்கை அனர்த்திலும் சிக்கி பரிதவிப்பு

81

சிறீலங்காவில் நிகழும் சீரற்ற காலநிலையினால் வடக்கு கிழக்கு தாகயப்பகுதிகளில் உள்ள பெருமளவான தமிழ் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன், போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்வுக்காக போராடும் மக்கள் மேலும் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் வவுனியா வடக்கு மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மருதோடை, ஊஞ்சால்கட்டி, காஞ்சுரமோட்டை பகுதிகளின் மழை வெள்ளம் காரணமாக 102 குடும்பற்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 90 பேர் மருதோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் இவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார பொருட்கள் அவசியமாகத் தேவைப்படுததாக மக்கள் கோருகின்றனர்.

இதுவரை 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.செட்டிகுளம் பிரதேசசெயலக பிரிவில் 85குடும்பங்களை சேர்ந்த292 பாதிக்கப்பட்டுள்ளனர்

வவுனியா வடக்கு பிரிவில் 168 குடும்பங்கள்477 பேர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக பிரதேச செயலகங்கள் வழங்கிவருகின்றனர்.
மருதோடை அ.த.க.பாடசாலை மற்றும் மருதோடை பொதுநோக்கு மண்டபம்,செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயம்,புளியங்குளம் ஆரம்பபாடசாலை,நைனாமடு பொதுநோக்கு மண்டபம், ஆகியவற்றில் இடம்பெயர்ந்தவர்கள்.

இதனிடையே, தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 21 அடியாக உள்ள நிலையில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக பெய்த மழை தற்போது ஓய்வுந்துள்ள நிலையில் பல இடங்களில் வெள்ள நிலைமைகளும் இடம்பெயர்வுகளும் தொடர்ந்து வருவதாக பிரசே செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேசசெயலகங்களை சேர்ந்த 10738 குடும்பங்களை சேர்ந்த 35, 756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பகுதியில் பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி,ஆனைகட்டியவெளி பிரதான உட்பட பல வீதிகளின் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை கிராமத்திற்கான போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயந்திர படகுகள் மூலம் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளின் பல பகுதிகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளதுடன் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்துவருகின்றர்.

இத்தொடர் மழையினால் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் 42 வீடுகள் பகுதியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள பாதிப்;பினால் முருத்தானை, பிரம்படித்தீவு சாராவெளி, முறுக்கந்தீவு ,அக்குறானை ,நாசியந்தீவு, புலாக்காடு , வடமுனை ஊத்துசேனை,கட்டு முறிவு,மதுரங்கேனி குளம், பெண்டுகள்சேனை போன்ற கிராமங்களின் போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கிவருகின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற வெள்ள நீரினால் குளங்கள் பெருக்கெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கண்காணிக்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நீர்பாசன திணைக்களம் கண்காணிக்கும் பணிகளை முன்னெடுத்துவருகின்றது.