பொய்யா விளக்கு – சிறீலங்கா அரசின் கொலைக்களத்தில் பணியாற்றிய வைத்தியரின் கதை

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்பின் போது முள்ளவாய்க்கால் கொலைக் களத்தில் சிக்கிய மக்களுடன் இறுதிவரை நின்று பணியாற்றி அவர்களுக்கு சேவைகள் புரிந்து பல உயிர்களை காப்பாற்றிய ஒரு மருத்துவரின் உண்மைக் கதை திரைப்படமாக வெளிவருகின்றது.

இந்த திரைப்படம் எதிர்வரும் 16 ஆம் நாள் பிரித்தானியாவில் திரையிடப்படவுள்ளதால் திரைப்படக் குழுவினருக்கு உங்கள் ஆதரவுகளை வழங்கி ஈழத்தில் இடம்பெற்ற படுகொலைகளை உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் அறிந்துகொள்வதற்கு வழி ஏற்படுத்துமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.