பொதுத் தேர்தலின் பின்னர் மோசமான நிலை உருவாகும்; எச்சரிக்கின்றார் அநுரகுமார

59

பொதுத் தேர்தலின் பின்னர் நாட்டில் உதயமாகும் பொழுது நல்ல நேரமாக இருக்காது என்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்படப் போவது சிறந்தவொரு நிலை அல்ல என்பதை இப்போதே காட்டியுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள முடியாது. 2010ஆம் ஆண்டு யுத்தத்துக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற போதும், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சு பதவி மற்றும் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கினர். இந்தமுறையும் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான் மையைக் கோருவது, நாட்டில் தற்போது வெற்றிகொள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்காகும்” என்றார்.