பெங்களுரை உலுக்கிய பேரொலி

இன்று(20)  மதியம் பெங்களுர் நகர மக்களை பீதி கொள்ள வைக்கும் ஒரு பேரொலி ஒன்று எழுந்துள்ளது. இது எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை அறியப்படவில்லை.

இன்று மதியம் 1.20 மணியளவில் பெங்களுர்  கே.ஆர். புரத்தை அண்டிய தொலைதூர பகுதிகளில் இந்த சத்தம் கேட்டதாகவும். கே.ஆர்.புரத்திலேயே இந்த ஒலியின் அளவு அதிகமாக உணரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பத்தை தாம் விசாரித்து வருவதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு இது போன்ற ஒரு ஒலியை தாங்கள் கேட்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெடிகுண்டு வெடித்தது போல இந்தச் சத்தம் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், வளைகுடாவில் அமெரிக்கா குண்டு வீசியது போது இதுபோன்ற சத்தத்தை தான் கேட்டதாக பதற்றத்துடன் கூறினார். சிலரின் வீட்டு கண்ணாடிகளும் உடைந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் சிலர் மிராஜ் விமானம் பறந்தால் ஏற்படும் சத்தம் போன்று உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை என்றும், புகம்பம் ஏற்படவில்லை என்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை விபரங்கள் அறியப்படவில்லை.