பூதன்வயல் கிராம மக்களின் அவலநிலை.

17

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பூதன்வயல் கிராம மக்கள், தாமக்கு பட்டினிச் சாவு இடம்பெறும் அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்தில் 240 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

அங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் தினக்கூலிக்குச் சென்று அதில் வரும் ஊதியத்தினை வைத்தே தமது அன்றாட வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந் நிலையில் தற்போது கொரோனாத் தொற்று அபாய நிலை காரணமாக அரசினால் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதால், அங்குள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பிற இடங்களில் மக்களுக்கான நிவாரணங்கள் பலராலும் வழங்கப்படுகின்ற போதும், இதுவரையில் தமது கிராமத்திற்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் தாம் பட்டினிச்சாவினை எதிர்கொள்ளும் அபாய நிலை ஏற்படுமென அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தாம் எதிர்கொண்டுள்ள அபாய நிலையினை கருத்திற்கொண்டு, தமக்கு யாராவது நிவாரணங்களை வழங்க முன்வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.