புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு நற்செய்தி!

இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம். மாதவ்

இலங்கை அகதிகளுக்கு முழுப் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளது. குடியுரிமை கொடுப்பதில் மத ரீதியிலான பிரிவினை கிடையாது. மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கும் என்றார்.