புத்தளத்தில் தாக்குதல்தாரிகளின் சுரங்கம் பகுப்பாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணை

160
புத்தளம்- வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள லெக்டோ தோட்டத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பாரிய வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

அதன் பின்னர் அந்த தோட்டப் பகுதி அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மாவனெல்லவில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களுகு்கமையவே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய தௌஹித் ஜமாத் உறுப்பினர்கள் முன்னர் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் வீடொன்றில் சுரங்கம் தோண்டப்பட்டதாக தெரிவித்தே பொலிசார் இந்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவியாளர் ருக்ஷான் பெர்னான்டோ மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேற்று சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.