புதிய பிரதமரை நியமிக்கப் போகிறாராம் சஜித்

0
33

நாடாளுமன்றத்தை பெரும்பான்மை பலத்துடன் வழிநடத்தும் ஒருவரை புதிய பிரதமராக நியமிக்கப்போவதாக புதிய ஜனநாயகக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் சஜித் பிரேமதசா நேற்று (7) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தியவர்களை அமைச்சர் பதவியில் அமர்த்தப்போவதில்லை. பதவி ஏற்றதும் நாடாளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதுடன் உறுதியான அரசு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரச தலைவர் தேர்தலின் பின்னரும் தான் பிரதமராக பதவியில் நீடிக்கப்போவதாக ரணில் விக்கிரமசிங்கா அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பின்னர் சஜித்தின் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் அரசியல்வாதிகளின் தேர்தல்காலக் கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் நோக்கத்தை கொண்டதாகவே இருப்பதால் சஜித்தின் கருத்து தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here