பிலிப்பைன்ஸில் கடும் புயல் தாக்கம்

0
10

சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் பிலிபைன்ஸ் தலைநகர் மணிலாவை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கம்முரி புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. கம்முரி புயல் பலவீனமடைந்திருந்தாலும் வலுவாகவே மையம்கொண்டுள்ளது, மணிக்கு சுமார் 165 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதன் வேகம் 230 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். இது தற்போது தெற்கு திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்முரி புயல் பாதிப்பை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த வீடு உள்ளிட்ட கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்து பொருள்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்தனர். மேலும் தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களும் அங்கே சிக்கிக்கொண்டுள்ளனர்.

மேலும் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக மணிலா விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என பேரிடர் மீட்புப் படை அதிகாரி லுயிசிடோ மென்டோசா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here