பிரதமராகப் பதவியேற்கும் மகிந்த ராஜபக்ஸ

118

இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை(21) பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் ஜனாதிபதியாக பதவியேற்றியுள்ளார்.

ஜனாதிபதி பதவி பொதுஜன முன்னணியினரிடம் இருக்கும் போது, பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரே பெரும்பான்மை வகித்தனர். இதனால் புதிய அரசாங்க செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் வரும் என ஜனாதிபதி தரப்பினர் கருதினர்.

இதனால், ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை இன்று இராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், தனது வாசஸ்தலமான அலரி மாளிகையிலிருந்தும் வெளியேறினார்.

இதனையடுத்து நாளை மகிந்த ராஜபக்ஸ நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். அவருடன் ஒரு புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.