சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டை விட்டு வெளியேற எடுத்த முயற்சிக்கு சிறிலங்கா நீதிமன்றம் தடை

163
1 Views

சிறீலங்காவில் புதிய அரசு பதவியேற்றதும் கொழும்பில் வெள்ளைக் காரில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சுவிற்சலாந்து நாட்டு தூதரகத்தில்பணியாற்றும் உள்நாட்டு பெண் பணியாளர் தனது பாதுகாப்புக் கருதி சிறீலங்காவை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சியை சிறீலங்கா நீதி மன்றம் தடை செய்துள்ளது.

சிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களம் வழங்கிய அறிக்கைக்கு அமைவாகவே இந்த தடை உத்தரவை விதிப்பதாக சிறீலங்காவின் கொழும்பு பிரதான நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் சிறீலங்கா அரசிடம் கடந்த வாரம் உத்தியோக பூர்வ வேண்டுகோளை விடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here