பயங்கரவாததடுப்புச்சட்டத்தை பலப்படுத்த சிறீலங்கா அரசு திட்டம்

100
7 Views

தற்போதுநடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம்மாற்றங்கள் எதுவும் இன்றி தொடர்ந்துஇருக்கும் அல்லது தேவை ஏற்பட்டால்சிறீலங்கா அரசு அதனைப்; பலப்படுத்தும்என சிறீலங்கா அமைச்சர்பந்துல குணவர்த்தனா நேற்று (04) தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் மிகவும் பலம்வாய்ந்தது. அதன் மூலமே விடுதலைப்புலிகளை தோற்கடித்தோம். புனித ஞாயிறு தாக்குதலின் பின்னரும்இந்த சட்டத்தின் மூலமே நிலமைகளைக் கட்டுப்படுத்தினோம். எனவே எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்காக நாம் அதனை பலப்படுத்துவோம்என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்மூலம் படையினர் அதிக அதிகாரங்களை பெறுவதாகவும், அதன் மூலம் அவர்கள்பெருமளவான மனித உரிமை மீறல்களைசிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருவதாகவும்அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள்குற்றம்சுமத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

பெருமளவானதமிழ் மக்கள் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டதற்கும், பெருமளவான அப்பாவி தமிழ் மக்கள்படுகொலை செய்யப்பட்டதற்கும், அரசியல் கைதிகளாக அப்பாவிதமிழர்கள் சிறையில் பல ஆண்டுகளாகதடுத்து வைக்கப்பட்டுள்தற்கும் இந்த சட்டமே காரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here