படைத்துறை ஒத்துழைப்புக்களை பலப்படுத்த இஸ்ரேல் ஆர்வம்

சிறீலங்காவுடன் படைத்துறை ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தி புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ள விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவுக்கான இஸ்ரேலின் தூதுவர் கலாநிதி ரொன் மல்கா சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை சந்தித்தபோதே இதனை தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் விவசாயம், கல்வி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் கணணி பாதுகாப்பு பொறிமுறை ஆகிய தறைகளில் சிறீலங்காவை பலப்படுத்த இஸ்ரேல் உதவிகளை புரியும்.

இந்தியாவின் விவசாயத்துறைக்கு இஸ்ரேல் வழங்கிய உதவிகளால் பெருமளவான விவசாயிகள் பலனடைந்துள்ளதாக இஸ்ரேல் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.