நோயாளர் எண்ணிக்கை 588 ஆக உயர்வு – 21 மாவட்டங்களில் ஊரடங்கு நீக்கம்

108
43 Views

சிறீலங்காவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு இன்று (28) தெரிவித்துள்ளது.

நேற்று 59 புதிய நோயகர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 455 பேர் தற்போதும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 21 மாவட்டங்களில் இன்று காலை 5 மணியளவில் நீக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் மாலை 8 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இது மே மாதம் முதலாம் நாள் வரை நடைமுறையில் இருக்கும்.

எனினும் கொழும்பு, கம்பகா, களுதுறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படமாட்டாது என சிறீலங்கா அரச தகவல்கள் தெரிவித்துள்ளன. அங்கு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் நாள் வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here