நேற்று தளர்த்தப்பட்ட ஊரடங்கு பொருட்கொள்வனவில் மக்கள்

23

கொரனா வைரசின் தாக்கம் காரணமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பெருமளவில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

இதன்போது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்ப படையினர் மக்களை ஒன்றுகூடுவதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இன்று காலை 6.00மணி தொடக்கம் ஊரடங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ள தொடர்ந்து மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் காணமுடிந்தது.

பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியிடவேண்டும் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையில் மக்கள் ஒன்றுகூடும் பொதுச்சந்தை போன்ற பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அதேபோன்று பொதுமக்களும் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இயந்திரங்களில் பணம்பெறும் இடங்கள்,பல்பொருள் அங்காடிகள்,மருந்துபொருட்கள் விற்பனை நிலையங்களில் அதிகளவான மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை காணமுடிந்தது.

சில பகுதிகளில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டோர் முண்டியடித்துக்கொண்டு சென்றதன் காரணமாக அப்பகுதியில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன.

நேற்று பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.