நிதி நெருக்கடியில் ஐ.நா – மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் பாதிப்பு

52

ஐக்கிய நாடுகள் சபை தற்போது மிகப்பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நெருக்கடி அதன் நாளாந்த செயற்பாடுகளை பாதிப்பதுடன், ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; செயற்பாடுகளையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நிதி நெருக்கடி காரணமாக ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் பணி நேரம் குறைக்கப்படவுள்ளது. சில கூட்டத்தொடர்கள் நிறுத்தப்பட்டவுள்ளன, பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், உலகில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐ.நா சிறப்பு பணியாளர்களின் பணிகளும் இடைநிறுத்தப்படவுள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமை செயற்பாட்டு நிபுணர்களின் பிரயாண கொடுப்பனவுகள் 25 விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பின் உடன்பாட்டு நடவடிக்கை பிரிவின் தலைவர் கெயில் வாட் தெரிவித்துள்ளார்.

பணியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளதகவும், கடந்த வருடம் பல கூட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.