நாளை ஐ.நா வில் காஸ்மீர் விவகாரம் சீனா,ரசியா பாகிஸ்தானுக்கு ஆதரவு

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக  ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது.ஐ.நாவின் உதவியை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன. இது அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு முதல்கட்டமாக கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவு தெரிவிக்கின்றன. நாளை நடக்கும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைவர் ஜோனா தலைமை இயக்க உள்ளார். இதனிடையே இந்தியாவின் பொறுப்பற்ற செயலால் கட்டுப்படுத்த இயலாத விளைவுகளை இந்தியா சந்திக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.