நாடு தழுவிய ரீதியில் மக்களை அணிதிரட்ட ஜே.வி.பி முடிவு

சிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் மக்களை அணிதிரட்டுவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளர்.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட ஜனநாயக நடைமுறைகளை புறம்தள்ளி நாடு ஒரு சர்வாதிகார ஆட்சிக்குள் செல்வதையே இந்த சட்டம் ஏற்படுத்தும் எனவும் இது தொடர்பில் நாடுதழுவிய ரீதியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்களை நடத்தப்பபோவதாகவும் அதன் தலைவர் அனுரா திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.