நகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை மூடுவதற்கான தீர்மானம்

17

ஊரடங்கு நாளை தினம் தளர்த்தப்படும்போது மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை திறக்காமல் மூடுவதற்கான தீர்மானம் மட்டக்களப்பு மாநகரசபையில் எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

தற்போது இலங்கையில் கொரனா தொற்று அச்சுறுத்தல்கள் காரணமாக தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்று விசேட அமர்வாக நடாத்தப்பட்டது.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன் முன்னெடுக்கப்படும் ஊரடசங்கின்போது மாநகரசபையினால் மக்களின் தேவையினை பூர்த்திசெய்ய முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கு இங்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அன்றாடம் கூலித்தொழில்செய்து இன்று தொழில்பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாநகரசபை ஊடாக ஒரு தொகை நிதியினை வழங்குவதற்கும் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 3000 குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு முதல் கட்டமாக இரண்டு மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதுடன் மாநகரசபையின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் அமைப்புகளின் உதவியையும் பெற்று இதனை முன்னெடுப்பது எனவும் இங்கு முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கொரனாவினை தடுக்க அரசாங்கம் மற்றும் வைத்தியர்கள்ääதாதியர்கள்ääசுகாதார துறை ஊழியர்கள்ääமட்டக்களப்பு மாநகரசபை சுகாதார ஊழியர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.உள்ளுராட்சிமன்றங்களின் கீழ் இயங்கும் பொதுச்சந்தைகளை மூட நடவடிக்கையெடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர்ääமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் நாளைய தினம் பொதுச்சந்தையினை திறப்பதில்லையென்ற தீர்மானமும் இன்றைய அமர்வின்போது எடுக்கப்பட்டது.