தற்காலிக வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை!!

78

வவுனியா செட்டிகுளம் பிரதேச்செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் பகுதிக்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் தற்காலிக வீடொன்றினை சேதப்படுத்தியுள்ளதுடன், பயன்தரு மரங்களையும் சேதமாக்கியுள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் நன்கு உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினை அந்த பகுதிக்கான கிராமசேவகர் மற்றும் பிரதேச்சபை உறுப்பினர் பரிகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

வவுனியா செட்டிகுளம் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துவருகின்றனர்.