தமிழ்   வேட்பாளருக்கே வாக்களியுங்கள் ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

117

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் ஜனாதிபதி  வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொடர்ச்சியாக 984 ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்துடன்  வாக்குக் கேட்டு வருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயக தேர்தல் தொடர்பாக  தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு என குறிப்பிட்டு மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அதற்கு புள்ளடியிடப்பட்ட பதாதைகளை  போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகள் தாங்கியிருந்தமை காண கூடியதாக இருந்தது.

இன்றுடன் 984நாளாக போராட்டம் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.