தமிழர் பூகோள அரசியல் – ஈழத்தமிழர் தமிழ்நாட்டுக்கு சொல்லவேண்டியது -தமிழில் ந.மாலதி

203

சீனாவின் தலைவர் ஷி-ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாட்டில் தனது கூட்டங்களை முடித்துக்கொண்ட பின் நேபாலுக்கு இரண்டு நாட்கள் வருகை தந்திருந்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே கடற்கரைகளே இல்லாமலுள்ள நாடான நேபாலுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒரு மூலோபாய கூட்டை அங்கு அறிவித்தார்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டங்களுக்கு நேபால் பிரதமர் தங்கள் ஆதரவை அறிவித்தார். முக்கியமாக கடற்கரைகளே இல்லாத நேபாலை தெற்காசியாவில் தரைத்தொடர்புகள் உள்ள நாடாக மாற்றும் திட்டத்தை ஷி-ஜின்பிங் அங்கு அறிவித்தார்.

இமாலய பிரதேசம் ஊடாக ஒரு பாதைத்திட்டத்தை அவர் முன்வைக்கிறார் என்று இதை புரிந்து கொள்ளலாம். தெற்காசியாவில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார-பாதையை தொடர்ந்து இப்போது இன்னுமொரு தெற்காசிய பொருளாதார-தரைப்பாதை திட்டத்தை சீனா முன்வைப்பது அதன் சமீபத்திய பூகோள அரசியல் மேலாண்மையை காட்டுகிறது.

இந்தியாவின் வட எல்லையில் இடம்பெறும் இந்த பூகோள அரசியல், சுயநிர்ணய உரிமை போராட்டங்களை நடத்தும் அங்குள்ள கஷ்மீர், திபெத் போன்ற நாடற்ற மக்களை தாக்கப் போகிறது.இமாலய பிரதேச தரைபாதைகள்

இந்தியாவின் வட எல்லையில் சீனா தனது தரைப்பாதை பூகோள அரசியல் ஊடாக தனது மேலாண்மையை அறிவிக்கும் அதே நேரத்தில், இந்தியவின் தென் எல்லையில், இந்திய தனது நட்பு சக்தியான ஐ-அமெரிக்காவுடன் இணைந்து கடல்வழி மேலாண்மையை நிறுவுவதற்கு கடும் முயற்சி எடுக்கிறது.

இதற்காகவே ஷி-ஜின்பிங் உடனான தனது கூட்டத்திற்கு நரேந்திர மோடி மாமல்லபுரத்தை, அதாவது பூகோள அரசியலில் இந்தியாவின் பலமான தமிழ்நாட்டைஇ தெரிவு செய்திருக்கிறார். தேர்தல் விடயத்தில் மோடியின் கட்சி தமிழ்நாட்டில் மிகவும் பலவீனமாக இருந்தாலும், இதை பூகோள அரசியலில் தனது பலமான இடமாக இந்தியா கருதுகிறது.

இதற்காகத்தான் மோடி தனது 74வது ஐநா பொதுச்சபை உரையில் கணியன் பூங்குன்றனாரின் பாடலையும், ஐ-அமெரிக்காவிலும்இ தமிழ் நாட்டிலும் தமிழின் தொன்மை பற்றியும் பேசியிருக்கிறார்.

ஐநாவில் பேசும் போதும் தமிழ் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி என்றும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டிற்கும் சீனாவின் ஃவூஜியன் மாநிலத்திற்கும் சகோதர உறவை முன்மொழிந்ததையும் இப்பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

வாஷிங்டனும் டெல்லியும் முன்னேப்போதும் இல்லாத வகையில் கூட்டாகவும் உறுதியாகவும் இந்திய -பசுபிக் பாதுகாப்பு கொள்கையில் சிறிலங்காவை நோக்கி அணுகுவதும் இப்போது இடம்பெறுகிறது.

இதே போல ஐ-அமெரிக்காவும் இந்தியாவும் BIMSTEC (பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், சிறிலங்கா, தாய்லாந்து, நேபால் மற்றும் புட்டான்) எனப்படும் இந்திய கடல் பிரதேசத்தில் கடற்கரைகளை கொண்டுள்ள ஏனைய நாடுகளையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

முன்னர் போலல்லாது, இனப்படுகொலை நாடான சிறிலங்காஇ இப்போது பாதுகாப்பு சார்ந்த கூட்டில் எந்த பக்கம் போவது என்ற தெளிவான தெரிவுகள் இன்றி குழம்புகிறது.

சிறிலங்காவின் நிலப்பரப்பை ஒற்றை நாடாக கருதும் வல்லரசுகளிடம் தமிழர்கள் தங்கள் கொள்கைகளை அறத்தோடும் தெளிவாகவும் தெரியப்படுத்த வேண்டும்.

இனவழிப்பு சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரச முறையை ஒழித்துஇ தமிழர் தேசிய பிரச்சனைக்கு ஒரு தீர்வை காணும் வரை, சீனாவோ, ஐ-அமெரிக்காவோ, இந்தியாவோ சிறிலங்காவின் ஒற்றை நிலப்பபை்பை உறுதிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதே தமிழ்ர்கள் இவர்களுக்கு கொடுக்கும் செய்தியாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய இயக்கங்களும்இ தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளும் இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அவர்களின் நன்மைக்கும், நாடற்ற தமிழர் நாகரீகத்தை பாதுகாப்பதற்கும் புதிய உலக ஒழுங்கில் இது அவசியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாடுகளை மையப்படுத்திய “வளர்ச்சி“ என்ற நோக்கில் செயற்படும் வல்லாதிக்க சத்திகளுக்குஇ அது ஐ-அமெரிக்காவாகிலும், சீனாவாகிலும், இந்தியாவாகிலும் அல்லது ஏனைய் பிராந்திய சக்திகளாயினும்இ நாடற்ற ஈழத்தமிழர் உறுதியான செய்தியை சொல்ல வேண்டும்.

தெற்காசியாவில் சுயநிர்ணய உரிமைக்காக போராடும் ஏனைய மக்களுடன் கூட்டொருமை வளர்ப்பதற்கும் தமிழர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

https://tamilnet.com/art.html?catid=79&artid=39607