தமிழர் பகுதிகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

179
11 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் தமிழ் மகா வித்தியாலய மைதானச் சுற்றுமதில் 06.09.2019 வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இன்று அப்பகுதிக்கு சென்று பாடசாலையின் சேதமாக்கப்பட்ட சுற்றுமதிலை பார்வையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பிலும் பிரதேச மக்களுடன் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் இது தொடர்பில் தொடர்புகொண்டு பேசியதுடன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.

தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுவருவதன் காரணமாக குறித்த பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று இப்பிரச்சனை தொடர்பாகப் பிரதேசச் செயலாளர் மேலதிக அரசாங்க அதிபர் போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரைகளை பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here