தமிழர் தாயகத்தில் பண்பாட்டு எழுச்சி வடிவமாக அமைந்த தமிழர் திருநாள் !

147
51 Views

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழர் தேசத்தின் பண்பாட்டு அரசியலின் எழுச்சிவடிமாக ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

யாழ் முற்றவெளியில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வானது தமிழர் தாயக உறவுகள், மலையக உறவுகள் அனைவரதும் பொதுப் பொங்கலிடலாக 108 பானைகள் வைக்கப்பட்ட தமிழர் திருநாளாக அமைந்திருந்தது. இதனை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டு செய்திருக்க,வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இளைஞர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.

2009ம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் தமிழர் தரப்பினால் பண்பாட்ட எழச்சி நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2009க்கு பின்னராக தற்போது பத்து ஆண்டுகளின் பின் தற்போது கூட்டுப்பொங்கலாக இது அமைந்துள்ளது.

யாழ்பாணத்துக்கு சுற்றுலாச்சென்றிருந்த பல வெளிநாட்டினரும் உற்சாகத்தோடு, தமிழர் திருநாள் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.

பண்பாட்டு தளத்தில் தமிழர்களாய் ஒருங்கிணைவது காலத்தின் கட்டயமாக அமைந்துள்ளதோடு, பண்பாட்டு எழுச்சியே தமிழர்களின் அரசியல் எழச்சிக்கும் சமூக விழிப்புக்கு அவசியமாக உள்ளது என ‘தமிழர் திருநாள்’ ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதன் ஒரு செயல்முனைப்பாக பண்பாட்டு தளத்தில் தமிழர்களை ஒருங்கிணைக்கு வகையில் ‘தமிழர் திருநாள்’ நிகழ்வுக்கான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, பல பொது அமைப்புக்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என அனைவரதும் பங்களிப்போடு தமிழர் திருநாள் நிகழ்வினை இவ்வாண்டு முன்கை எடுத்துள்ளதாகவும், வருங்காலத்தில் தமிழர் தாயகத்தின் மிகப்பெரும் பண்பாட்டு எழுச்சி நிகழ்வாக ‘தமிழர் திருநாள்’ அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயகப்பகுதியில், தமிழர்களின் வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், ‘தமிழர் திருநாள்’ எனும் பண்பாட்டு அரசியல் முன்னெடுப்பென்பது கவனத்தில் கொள்ளத்தக்கது என சமூக, அரசியல் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here