தமிழர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்

44

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மேலும் இவ்விவகாரத்தை இழுத்தடிக்கக் கூடாது.

ஏழு பேரை விடுதலை செய்யும் கோப்பை தன்னிடம் ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பழனிச்சாமி அரசிற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து இவர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என தினகரன் தெரிவித்துள்ளார்.