தமிழரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா தலைமையில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது. கட்சிக் கொடியை மாவை.சேனாதிராசா ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சியான புளொட், ரெலோ அமைப்புகளின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், பா.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன், எஸ்.சிவமோகன், என்.கோடீஸ்வரன், ஜி.சிறிநேசன் ஆகியோரும்,

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபை முதல்வர் இ.ஆர்னல்ட், வடமாகண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்