தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும் தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6மணிமுதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த 144 தடை உத்தரவு மார்ச் 31ஆம் திகதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகின்றது என்று குறிப்பிட்ட முதல்வர், தடை அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதற்கமைவாக போக்குவரத்துகள் இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மீன், இறைச்சி, மளிகை கடைகள் தவிர ஏனைய கடைகள் இயங்காது

இது போன்ற அத்தியாவசிய தேவைகள் நடைபெறும் ஒழுங்கில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.