ஞானசார தேரரின் நீதிமன்ற கட்டளை அவமதிப்பை கண்டித்து பிரேணை- சபையில் நிறைவேற்றினார் யாழ் பிரதி முதல்வர்

53

கடந்த 23/09/2019 நாளன்று முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துள் எரிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், இறந்த பௌத்த விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்காக அத்துமீறி ஆலய வளாகத்துள் நுளைந்து, அராஜகச்செயற்பாட்டில் ஈடுபட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞான சாரதேரர் உட்பட்ட அவரது சகாக்களுக்கும், இனவாதச்செயற்பாட்டில் ஈடுபடவைத்து விட்டு வேடிக்கை பார்த்து கைககட்டி நின்ற பொலிஸாருக்கும் எதிராக யாழ் மாநகரசபையின் பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் அவர்களால் பிரேரணை ஒன்று சபைக்கு கொண்டு வரப்பட்டது.

இத்தீர்மானத்தில் கட்சிபேதமின்றி அனைவரும் கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

இத்தீர்மானத்தின் போது இரா.செல்வவடிவேல், ப.தர்ஷானந்,  வ.பார்த்தீபன், ஸ்ரீ,குயிலன் போன்றோர் கடும் கண்டனத்தை வெளியிட்டு உரையாற்றியிருந்தனர்.

இறுதியில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுல் ஆனோல்ட் இவ் விடயம் கண்டிக்கத்தக்கது எனக்குறிப்பிட்டு இத் தீர்மானத்தை ஏகமனதாக அனைவராலும் நிறைவேற்றப்பட்டது.