ஜுன் மாதம் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது

53

எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் நாள் பொதுத் தேர்தலை நடத்துவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றது என சிறீலங்கா தேர்தல் திணைக்களம் சிறீலங்கா உயர் நீதிமன்றத்தில் இன்று (20) தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்தலாம் என வைத்திய அதிகாரிகள் தெரிவித்து 60 தொடக்கம் 75 நாட்களின் பின்னரோ தேர்தலை நடத்தமுடியும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த விசாரணைகளில் 5 நிதிபதிகள் வழக்கை விசாரணை செய்திருந்தனர்.