ஜனாதிபதி வேட்பாளராவதற்காகவே ஐ.தே.க. வை உடைத்தார் சம்பிக்க ; நவீன் புதுக் குற்றச்சாட்டு

19

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று 2025 இல் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு முயல்கின்றார் என்பது தெளிவான விடயம் என நவீன் திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டமைக்கு அவரே முக்கிய காரணம் எனவும் நவீன் திஸநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சிக்குள் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனம் கிடைக்காது என்பதால் அவர் கட்சியை உடைத்தார் என நவீன் திஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீங்கள் அவரை குற்றம்சாட்டுகின்றீர்களா என்ற கேள்விக்கு சம்பிக்க ரணவக்கமும் ஒரு காரணம் என நவீன் தெரிவித்துள்ளார்.