செல்வராணி புலனாய்வுத்துறை ஊடாக எம்மை மிரட்டுகிறார்

இலங்கையின் காணாமல்போனவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டுமானால் இலங்கையினை சர்வதேச நீதிமன்றம் ஊடாக சர்வதேச சமூகம் விசாரணைசெய்வதன் மூலமே தீர்வினை வழங்கமுடியும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் திருமலை மாவட்ட தலைவி திருமதி செ.கைரெலி தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

உள்ளக விசாரணைகள் மூலம் காணாமல்போனவர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.இந்த நிலையில் மீண்டும் காலநீடிப்பு வழங்கப்படுவதனால் எந்தவித செயற்படுகளும் முன்னெடுக்கப்படாது.

காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட அலுவலகம் வெறும் கண்துடைப்பாகும். காணாமல்போனவர்களுக்கு நீதிகிடைப்பதாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ அல்லது குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஊடாகவோ இலங்கை தொடர்பில் விசாரணைசெய்யப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா. முனித உரிமைகள் கூட்டத்தொரில் பங்குகொள்ளும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய உறுப்பு நாடுகளின் மனசாட்சியை தட்டும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் வடகிழக்கு தழுவிய ரீதியில் வடக்கில் யாழ்பாணத்திலும் கிழக்கில் அம்பாறையிலும் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பிற்கு அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பொற்றின் உறுப்பினர் ஒருவரால் தமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் தலைவி திருமதி வதனா வாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த செல்வராணி என்பவர் புலனாய்வுத்துறை ஊடாக தமது உறுப்பினர்களை மிரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் ஒரு தலைவியாக அவர் செயற்படும் அவர் எவ்வாறு ஒரு அரச புலனாய்வுத்துறையினரைக்கொண்டு மக்களை மிரட்டமுடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இவர்களா மக்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கபோகின்றார்கள்.இவர் இவ்வாறான செயற்பதடுகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.அவர்களது அமைப்புக்கும் எங்களது அமைப்புக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை.

அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கின்றனர்ääநாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கின்றோம்.அவ்வாறான நிலையில் இவர்கள் நடந்துகொள்ளும்விதம் எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.