ஆலோசனையை உதாசீனம்செய்தோர் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பிவைப்பு

15

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்காத அக்குரணை பகுதியை சேர்ந்த 144 பேர் இன்று (05) அதிகாலை புனாணை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தாலும், மக்களின் கவனயினத்தால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.