சுமந்திரன் பதவி விலக வேண்டும் – மனோன்மணி சதாசிவம்

156
13 Views

தமிழ் மக்களின் ஆணையை மதித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் கூட்டமைப்பில் இருந்து விலகவேண்டும் என மூத்த சட்டவாளரும், மனித உரிமை செயற்பாட்டளருமான திருமதி மனோன்மணி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கொழும்பு ரெலிகிராப்ஃ பத்திரிகைக்கு எழுதி பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ் இனம் தனது இனத்தில் உள்ள சில இனவிரோதிகளால் தொடர்ந்து துன்பங்களை சந்தித்து வருகின்றது. இதற்கு மேலும் நாம் அதனை அனுமதிக்க முடியாது. எனவே தமிழ் மக்களின் ஆணையை ஏற்று சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து உடனடியாக விலகவேண்டும்.

அவர் அதனை செய்ய தவறினால் மக்களின் ஆணையின் படி செயற்படுமாறு நாம் தமிழத் தேசியக் கூட்டமைப்பை கேட்டுக்கொள்வோம். சுமந்திரனுக்கு பேச்சுரிமை உண்டு. ஆனால் அதேசமயம் அவர் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கான நோக்கத்தையும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும் மதிக்க வேண்டும்.

கூட்டமைப்பில் இருந்து கொண்டு அவர் தனது சொந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here