சீனாவின் அதிநவீன ரொக்கட் வெடித்துச் சிதறியது

45

சீனாவினால் இன்று ஏவப்பட்ட அதிநவீன ரொக்கெட்டான ‘குவைசோவ்  – 11’ ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. இது குறித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறைந்த செலவில் அதிக எடையை சுமந்து செல்லும், திட எரிபொருள் பயன்படுத்தப்படும் ’ குவைசோவ்  – 11’ ரொக்கெட்டுடன் 6 செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக 3 ஆண்டுகள் திட்டமிட்டிருந்தது. அந்த முயற்சியின் பயனாக இன்று ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ரொக்கெட் கிளம்பிய ஒரு நிமிடத்தில், நடுவானில் வெடித்துச் சிதறியது.

இதற்கான காரணம் குறித்து ஜியுகுவான் விண்வெளி மையத்தின் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் சீனாவினால் வெற்றிகரமாக ஏவப்பட்ட  ரொக்கெட்டான ’குவைசோவ் – 1ஏ’ ரொக்கெட்டின் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரொக்கெட் 112.2 மீற்றர் விட்டம், 700 தொன் எடை கொண்டது.