சி.வி. விக்னேஸ்வரனின் ஈழத் தமிழர் குடியுரிமை தொடர்பான உரைக்கு கருத்துக் கணிப்பு

87

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் தற்போது இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் பற்றி தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட கருத்தில் கடந்த 30 வருட காலமாக இந்தியாவில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளை இந்திய ஊடகம் ஒன்று கருத்துக் கணிப்பிற்கு விட்டுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் 76% வீதமானோர் நியாயமானது எனவும், 16 வீதமானோர் தேவையற்றது என்றும், 9 வீதமானோர் பரிசீலிக்கத் தக்கது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.