Home செய்திகள் சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு; இன்று நீதிமன்றத்தில் முன்னிலை

சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு; இன்று நீதிமன்றத்தில் முன்னிலை

தடையையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நேற்றுக் காலை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனத் தெரிகின்றது.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்றைய தினம் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் எனத் தெரிகின்றது.

இதேவேளையில் சிவாஜிலிங்கத்தை பிணையில் எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைதாகியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 4 1 சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு; இன்று நீதிமன்றத்தில் முன்னிலைகோண்டாவில் பகுதியில் நேற்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய வேளை அவர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றத் தடை உத்தரவை மீறிநினைவேந்தலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தியாக தீபம் திலீபனின்நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பாகியுள்ள நிலையில், அந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்த நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் யாழ். நீதிவான் நீதிமன்றில் தடையுத்தரவைப் பொலிஸார் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்னிரவு வரை அவர் நீதிமன் றத்திலோ அல்லது நீதிவான் முன்னிலையிலோ ஆஜர் படுத்தப்படாமல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராகப் பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு விடுக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது.

அவ்வாறான நிலையில், அவர் நீண்டகாலத்துக்குத் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக யாழ். சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் குழு ஒன்று சிவாஜிலிங்கத்துக்கக ஆஜராகத் தயாராக உள்ளனர்.

Exit mobile version