சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் சென்ற கப்பல் அழிப்பு

0
65

சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பிச் எம்.வி சன் சீ என்ற கப்பலில் சென்ற தமிழ் மக்கள் கனடாவில் தஞ்சமடைந்திருந்தனர்.

தற்போது அந்த கப்பல் உடைக்கப்படுவதாக கனடா நாட்டு கடற் பெறியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வன்கூவர் கடற்பகுதியில் உள்ள நனைமோ வொட்டபுரன்ட் தளத்தில் உள்ள கப்பல் உடைக்கப்பட்டு பிறிதொரு இடத்திற்கு பாகங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

770 தொன் எடை கொண்ட இந்த கப்பலில் இனப்படுகொலையில் இருந்து உயிர்தப்பிய 492 தமிழ் மக்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கப்பலை கண்டறிந்த கனேடிய கடற்படையினர் அதனை துறைமுகத்திற்கு இழுத்துச் சென்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here