சிறீலங்காவின் ஆடை உற்பத்தி பாதிப்பு – 5 இலட்சம் பேர் வேலை இழப்பு

எதிர்வரும் 3 மாதங்களில் சிறீலங்காவின் ஆடை உற்பத்தி 2 பில்லியன் டொலர்களை இழக்கும் அபாயம் உள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறீலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனா நேற்று (30) தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரசின் தாக்கம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் சிறீலங்கா அரசு 2 பில்லியன் டொலர்களை இழப்பதுடன், 500,000 பேர் வேலை வாய்ப்பினையும் இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த நாடுகளுக்கு கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆடை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதாகவும் மேலதிக கொள்முதல்களை தாம் பெறவில்லை எனவும் ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தை அரசு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் ஊதியப் பணம் 18 பில்லியன் ரூபாய்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.