சிறிலங்கா நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ள அமெரிக்க படையினர்

157
37 Views

சிறிலங்காவில் அமெரிக்கப் படை வீரர்கள் 700 பேர் மர்மப் பெட்டிகளுடன் நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படைவீரர்கள் வெளிநாட்டு தூதுவர்களுக்கு உள்நாட்டில் வழங்கப்படும் சலுகைகளை அனுபவித்து வருவதாக இன்றைய சிங்கள தேசிய வார இதழ் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அமெரிக்கப் படைவீரர்கள் பலர் கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளதாகவும், இவர்கள் எடுத்து வந்த பைகளை குறித்த விடுதிகளில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் பரிசோதனை மேற்கொள்ள முற்பட்ட போது, அதற்கு அவர்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர், அமெரிக்கத் தூதரகத்திலுள்ள வாகனமொன்று குறித்த விடுதிக்கு வந்து அப்பெட்டிகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு விடுதிக்கு பெட்டிகளுடன் வருகை தந்தவர்கள் அமெரிக்க தாக்குதல் ஆலோசகர்கள் இருவர் என தகவல் வட்டாரங்கள் மூலம் அறியவந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அமெரிக்க படை வீரர்கள் இருப்பதை அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here