சிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்

சிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர். இவர்கள் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

கருணா,பிள்ளையான்,,கருணா போன்றவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே தவிர அவர்களினால் எந்த முடிவினையும் எடுக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஜேர்மனியை சேர்ந்த அம்மா உணவகம் ஊடாக அமரர் மதிவதனசேகரன் கெங்காதேவியின் ஞாபகார்த்தமாக பாலச்சந்திரன் அறக்கட்டளையினால் இந்த குடிநீர் விநியோக திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் கோப்பாவெளி பிரதேச மக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் திட்டத்தின் ஊடாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நன்மைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,கிராம முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கஜேந்திரன்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது,அவர்களின் உறவினர்கள் வீதிகளில் கண்ணீருடன் அலைந்துவருகின்றனர்.அரசியல் கைதிகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பு பத்து ஆண்டுகள் பாராமுகமாக இருந்ததன் காரணமாக மட்டக்களப்பினை சேர்ந்த இளைஞனை சிறையில் பலிகொடுக்கவேண்டிய நிலையேற்பட்டது.

இந்த அரசாங்கத்திற்கு ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து யுத்த குற்றவாளிகளை பாதுகாத்து தொடர்ந்து முண்டுகொடுப்பவர்களாக இந்த கூட்டமைப்பினர் இருந்துவருகின்றனர்.பத்து ஆண்டுகளில் தங்களுக்கு வேண்டிய சலுகைகளைப்பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் நடைபிணங்களாக இருக்கும் நிலையே இருந்துவருகின்றது.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்படவேண்டும்.அதற்கான திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது.வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு 15ஆசனங்கள் கிடைக்குமாகவிருந்தால் எங்களுக்கு மக்களின் வாழ்கையில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகயிருக்கும்.

நாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி எந்த அரசாங்கத்தினையும் ஆதரிக்கவோ,எந்தவொரு சர்வதேச சக்திகளின் தேவைக்காவும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவினை எந்த அரசுக்கும் வழங்கப்போவது கிடையாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக அரசாங்கத்தினை நிபந்தனையில்லாமல் ஆதரித்து தமிழ் மக்களை ஏமாற்றிவந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் இனங்கண்டுகொண்டுள்ளனர்.மக்கள் கூட்டமைப்பினைவிட்டு வெளியேறி வேறுகட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நிலையேற்பட்டுள்ளது.அரசாங்க கட்சிகளுக்கும் ஈபிடீபி போன்று துணைகுழுக்கும் பின்னால் செல்லும் துரதிர்ஸ்டவசமான நிலையேற்பட்டுள்ளது.இவர்களின் பின்னால் செல்வதனாலும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

எமது பகுதிகளை திட்டமிட்டு புறக்கணித்து எமது மக்களை பொருளாதார ரீதியாக அழிக்க முற்படுகின்றபோது அந்த அரசாங்கத்தின் முகவர்களாக செயற்படுகின்ற வியாழேந்திரனாக இருக்கலாம்,கருணாவாக இருக்கலாம்,பிள்ளையான்குழுவாக இருக்கலாம் இவர்களினால் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியாது.ஏனென்றால் இவர்கள் இந்த அரசாங்கத்தின் முகவர்களாகும்.

அவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுகின்றவர்களே தவிர அவர்களினால் முடிவுகளை எடுக்கமுடியாது.நிமிர்ந்து நின்று அரசாங்கத்துடன் அவர்களுக்கு எந்த கருத்துகளையும் சொல்லமுடியாது.இவர்களுடன் செல்வதனால் எந்த மாற்றத்தினையும் மக்கள் ஏற்படுத்திக்கொள்ளமுடியாது.

அடுத்ததாக விக்னேஸ்வரன் என்பவர் வந்தார்.அவரை நாங்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம்.அவரை வைத்துதான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.2014ஆம் ஆண்டு அரசியலமைப்பினை உருவாக்கவிருந்த காலத்தில் ஒற்றையாட்சியினை நிராகரித்து தமிழ் தேசம் அங்கீகரிக்கும் சமஸ்டியை உருவாக்குவதற்கான அழுத்ததினை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.அந்த அடிப்படையில் ஓரு தீர்வுத்திட்டமும் எழுதப்பட்டது.

ஆனால் இந்த விக்னேஸ்வரனோ தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுபவர் என தன்னை காட்டிக்கொண்டு,தமிழ் மக்களின் அபிலாசை மீது பற்றுறுதிகொண்டவர் என காட்டிக்கொண்டு தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தில் தமிழ் தேசம் இறைமை என்பதை உள்ளடக்குவதற்கு அவர் மறுத்துவிட்டார்.அதுமட்டுமன்றி தயாரித்த தீர்வினை உரிய காலத்தில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டிய நிலையில் அதனைக்கொண்டு சென்று கொடுப்பதற்கே அவர் மறுத்திருந்தார். தமிழ் மக்கள் பேரவை ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு பேரெழுச்சியை விக்னேஸ்வரன்நாசமாக்கினார், குழப்பியடித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனை செய்யவில்லையென்பதற்காக அதனை மக்கள் ஒதுக்கினார்ளோ அதனை செய்வதற்கு தமிழ் மக்கள் பேரவை முய்றசிசெய்யாமல் அனைவரையும் நம்பவைத்து பேரவைக்குள் கொண்டுவந்ததன் பின்னர் தமிழ் மக்கள் பேரவைக்குள் உருவாக்கப்பட்ட தீர்வினை அரசாங்கத்திடம் கையளிக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியை நாசமாக்கினார்.

அதேபோன்று வடக்கு மாகாணசபையில் தமிழ் தேசம் நிராகரித்த தீர்வுத்திட்டம் ஒன்றை நிறைவேற்றி பேரினவாதிகளுக்கு தீணிபோடும் விதமாக 13வது திருத்த சட்டத்திற்குள் தமிழர்களை முடக்கும் இந்தியாவின் தேவைக்கு செயற்படுவதற்கு அந்த தீர்வினை மாகாணசபையில் தயாரித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதற்காக தமிழ் மக்கள் அதனை நிராகரிக்கும்பொழுது கூட்டமைப்பில் இருந்துவெளியேறும் மக்கள் கஜேந்திரகுமார் அணிக்கு பின்னால் வந்துவிடக்கூடாது என்பதற்காக விக்னேஸ்வரன் ஒரு தேசியவாதிபோன்றும் சமஸ்டியை ஏற்றுக்கொள்பவர் போன்றும் தோற்றப்பாட்டை காட்டுவதற்காக எழுக தமிழ் நிகழ்வுகளை பயன்படுத்தினாரே தவிர நடைமுறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி நடைமுறையினை நிராகரிப்பதற்கு அவர் தயாராகயில்லை.

விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் விக்னேஸ்வரனுக்கு பின்னால் செல்லவைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்துவருகின்றார்.

இன்று விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றார்.கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலைபோய்விட்டதாக கூறுகின்றார்.ஆனால் இவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்தவேறுபாடும் கிடையாது.விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படுவதுபோன்று ஒரு நாடகமாடுகின்