சிரிய அதிபரைக் கொல்ல நினைத்தேன் – ட்ரம்ப்

31
45 Views

சிரிய அதிபரான பஷார் அல் ஆசாத்தை 2017ஆம் ஆண்டு கொலை செய்ய நினைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் 2017ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொல்ல நினைத்தேன். ஆனால் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜிம் மேட்டிஸ் அந்த முடிவை மறுத்து விட்டார். அதனால் அவர் முடிவிற்கே விட்டுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கும், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வந்ததுடன், அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.  ஆசாத்திற்கு ஆதாரவாக ரஸ்யா செயற்பட்டு வருகின்றது.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகளை அரசு கூட்டுப்படைகள் மீட்டு விட்டன.

ஆனால் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் சண்டைகள் நடைபெற்று வருகின்றது. சிரிய உள்நாட்டுப் போரில் பல இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இதேவேளை ஆசாத்தின் அரசுப் படைகள் சிரியப் போரில் ரஸ்ய அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here