சிரமதானப் பணியில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனி

83

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனியின் ஏற்பாட்டில் புனாணை இலுக்குப்புல் குளம் விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (13.09.2019) சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

தொகுதிக்கொரு வேலைத்திட்டம் எனும் கருத்திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனியின் ஏற்பாட்டில் புணானை கிழக்கு இலுக்குப்புல் குளம் விநாயகர் ஆலய வளாகத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

இச் சிரமதானப் பணிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராஜா மற்றும் உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள், தமிழரசுக் கட்சியின் மகளீர் அணி, வாலிபர் முன்னனியின் அங்கத்தவர்கள், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆலய வளாகம் முழுவதும் காணப்பட்ட பற்றைக்காடுகள் அனைத்தும் அகற்றப்ட்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், விசமிகளால் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பாதுகாப்பு வேலிகளும் சீர் செய்யப்பட்டன.