சிங்கள பௌத்தர்கள் ஒன்று திரண்டு கலப்படம் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டும்; ஞானசாரர் அழைப்பு

40

பொதுத் தேர்தலில் இந்த நாட்டின் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கலப்படம் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க முன்வரவேண்டும் என பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;

“முஸ்லீம் அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை முற்றாக ஒழித்துக்கட்டாமல் ஓயப்போவதில்லை. பௌத்த தேசமான இந்த நாட்டில் முஸ்லீம்அடிப்படைவாதிகளின் அடாவடித்தனத்தை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டும் வரையில் நாங்கள் எங்கள் போராட்டங்களை கைவிடப்போவதில்லை.

இந்த நாடு மெதமுலானவில் வாழும் மகிந்த ராஜபக்சாக்களின் பரம்பரை சொத்தல்ல பரம்பரை அரசியல் என்பதைநாம் ஒரு போதும் அனுமதியோம். சிங்கள பௌத்த நாடான இந்த நாட்டில் பௌத்தர்களை பாதுகாக்கும் சுத்தமான ஒரு பௌத்தனின் தேவை எமக்கிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதற்கும் அசைந்துகொடுக்காத எந்த அடிப்படைவாதத்துக்கும் அடிபணியாத நல்ல பௌத்தன் தேவைப்பட்டதால் தான் கடந்த பொதுத்தேர்தலில் 69 இலட்சம் தனி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளோடு நாங்கள் கோதபய ராஜபக்சவை தெரிவு செய்தோம். இந்த வாக்குகளுக்கு மூல காரணம் நாங்கள். தமிழ்முஸ்லீம் வாக்குகள் இல்லாமல் எவரும் வெற்றிபெறமுடியாது என்ற அடிப்படைவாதிகளின் போலிவாதங்களை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் உடைத்தெறிந்துவிட்டோம்.”